இந்த சமூக சேவைகள் திணைக்களம், 1944 ஆம் ஆண்டு யூலை மாதம் 10 ஆம் திகதி இதன் நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட சேர் ஐவன் ஜெனிங்ஸ் தலைமையிலான ஆணைக்குழுவின் VII-வது அமர்வு ஆவணங்கள் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைய 1948 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 01 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. நிலவுகின்ற சமூக சேவைகளையும் குறித்த ஆணைக்குழு முன்வைத்த பிரேரணைகளின் பரிணாமத்தையும் மீள்கட்டமைப்பது இந்தத் திணைக்களத்தின் ஆரம்பப் பணியாகக் காணப்பட்டது.
அன்று இயங்கிய சமூக சேவைகள் திணைக்களத்தினால் கையாளப் பட்ட பின்வரும் அம்சங்கள் தொடர்பான சமூகப் பாதுகாப்பு சார்ந்த செயற்படுத்துகை முறையியல்கள் மற்றும் ஒருங்கிணைப்பு முறையியல்கள் ஆகியன பற்றி ஆராய்வதற்கும், தாய்மார்களுக்கான நிவாரண சேவைகள் விஸ்தரிப்பு, தொழிலாளர் நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள், சேவைகள் நிபந்தனைகள் என்பன பற்றி ஆராய்வதற்குமான சமூக உதவி தொடர்பான தொழிற்பாடுகள் இந்த சேர் ஐவர் ஜெனிங்ஸ் ஆணைக்குழுவுக்கு உரித்தளிக்கப்பட்டது.மேலும் வாசியுங்கள்